"என்னங்க சொல்றீங்க... நீங்க என்ன சொல்றீங்க".. தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம் ?: உங்கள் பெயர் இருக்கானு பார்த்துக்கோங்க…
தமிழகத்தில் இன்று மாலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் 1 கோடி வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்களில், 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 772 கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவற்றில் 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 221 கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதில், உயிரிழந்தவா்கள், முகவரி மாறியவா்கள், கண்டுபிடிக்க முடியாதவா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் ஆகியோரின் உண்மைத்தன்மை மீண்டும் ஆய்வு செய்து நீட்டிக்கப்பட்ட காலத்தில் பட்டியலில் இணைக்கப்பட்டது. இதில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதன்படி தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் வெளியிடுகிறாா். அதைத் தொடா்ந்து தோ்தல் ஆணையம், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பதிவிட்டு பாா்வையிடலாம்.
97 லட்சம் முதல் 1 கோடி வரையிலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள் முகவரி மாற்றியவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும். இப்படி நீக்கப்பட்டதற்கான காரணமும் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும். இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம்என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

