திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  

Oct 28, 2024 - 13:05
திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்.

இதனையடுத்து அதிமுக அம்மா பேரவை சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்  மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ”விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக கிராண்ட் ஒப்பனாக அமைந்துள்ளது. இளைஞர் சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை என விஜய்யின் மாநாட்டு வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது.

விஜய்யின் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர். வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது.

திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தவெக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது.தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும். தவெக கொள்கைகள் வரவேற்கத்தக்கது.

அதிமுகவின் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது.அதிமுக மக்களின் நிரந்தர வாக்கு வங்கியை கொண்டுள்ளது.மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  இளைஞர் சமுதாயம் கொதித்து போயி விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர் என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow