நெட்டிசன்களின் க்ளாப்ஸ் அள்ளும் கோபி சுதாகரின் சொசைட்டி பாவங்கள்!
யூடியூப் தளத்தில் நகைச்சுவை உணர்வுடன் கூடிய வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான கோபி மற்றும் சுதாகரின் பங்களிப்பில் தற்போது வெளியாகியுள்ள ’சொசைட்டி பாவங்கள்’ வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கோபி, சுதாகர் மற்றும் அவரது டீம் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை நகைச்சுவை தன்மையுடன் வீடியோவாக தங்களது யூடியூப் பக்கமான “பரிதாபங்கள்” சேனலில் வெளியிடுவது வழக்கம்.
பரிதாபங்கள் யூடியூப் சேனலை தற்போது வரை 6 மில்லினியனுக்கும் அதிகமான நபர்கள் பின் தொடர்ந்து வருகின்றன. கோபி மற்றும் சுதாகர் தங்களது திருமணத்திற்கு பின், குடும்பத்திற்குள் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி புதுப்புது பரிதாபங்கள் வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில் நேற்று ”சொசைட்டி பாவங்கள்” என்கிற வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியான 20 மணி நேரத்தில் 1.5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோவினை பலர் பகிர்ந்து கோபி, சுதாகர் மற்றும் அவரது டீமை பாராட்டி வருகின்றனர். அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், சமூகத்தில் பேச தயங்குகிற சாதிய உட்கட்டமைப்பினை சிலர் எவ்வாறு தவறாக கையாள்கிறார்கள், சாதி மற்றும் முன்னோர்களின் வரலாறு என இளைய தலைமுறையினரை தவறாக ஒரு சிலர் வழிநடத்தும் முறைகளையும், இதனால் இளம் தலைமுறையினர் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதனையும் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளதாக பலர் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் கவின் ஆணவக்கொலை தமிழகத்தில் அதிர்வலைகளை கிளப்பியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக அக்கறையுடன், இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “சொசைட்டி பாவங்கள்” வீடியோ அமைந்திருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட சில பயனர்களின் பதிவு விவரங்கள் பின்வருமாறு-
வீடியோவினை பகிரும் பல நபர்கள், வீடியோ டெலிட் செய்வதற்குள் பார்த்துவிடுங்கள் எனவும் தங்களது பதிவில் குறிப்பிட்டு வருகிறார்கள்.
தமிழ் படம் இயக்கிய இயக்குநர் சி.எஸ்.அமுதன், கோபி மற்றும் சுதாகரை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?






