manjummel boys: மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் சாதனையே முறியடித்தது எம்புரான்
மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் வசூல் சாதனையினை முறியடித்து எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஆன லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2E:எம்புரான் கடந்த மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முதல் பாகமான லூசிஃபர் படம் மலையாளம் மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதனால், L2E:எம்புரான் படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. பான் இந்தியா படமாக வெளியாகிய எம்புரான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்ற நிலையிலும், பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டது.
இந்நிலையில் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தினை முந்தியுள்ளது எம்புரான் திரைப்படம். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பினை பெற்றது. மஞ்சுமல் பாய்ஸ் 72 நாட்கள் திரையில் ஓடியது. அதன் மொத்த வசூலை வெறும் 10 நாட்களில் முறியடித்துள்ளது எம்புரான் திரைப்படம்.
இதுத்தொடர்பாக ”இண்டஸ்ட்ரீ ஹிட்” எனக்குறிப்பிட்ட ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றினையும் படத்தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது.
வசூல் சாதனை: மலையாள திரையுலகின் டாப் 10 திரைப்படங்கள்
- எம்புரான்
மஞ்சுமல் பாய்ஸ்
2018
ஆடுஜீவிதம்
ஆவேஷம்
புலிமுருகன்
பிரேமலு
லூசிபர்
அஜயந்தேரண்டம் மோசனம்
மார்கோ
What's Your Reaction?






