லேடி நித்யானந்தாவா? ஆன்மீக குருவின் வைரல் வீடியோ.. சாத்வி பிரேம் பாய்ஷா விளக்கம்
பெண் ஆன்மீக குருவான சாத்வி பிரேம் பாய்ஷா தனது தந்தையினை கட்டியணைத்த வீடியோ உண்மைக்கு புறம்பான வகையில் வைரலாகிய நிலையில், இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருபுறம் துறவியாக ஆன்மீக போதனைகளை வழங்கிக் கொண்டு, மறுப்புறம் துறவறத்திற்கு முற்றிலும் எதிரான தகாத முறையில் உறவு கொள்ளும் போலி சாமியார்கள் தற்போதும் சமூகத்தில் மறைமுகமாக உலாவி கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பெண் ஆன்மீக குருவாக வட மாநிலங்களில் அறியப்படும் சாத்வி பிரேம் பாய்ஷா தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலான வீடியோவும்.. பெண் சாமியாரின் விளக்கமும்:
வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு அறையில் சாத்வி பிரேம் பாய்ஷா ஆண் ஒருவரை கட்டியணைத்து முத்தமிடுகிறார். அந்த ஆண் யாரென்று பார்த்தால்? அவர் பெண் ஆன்மீக குருவான சாத்வி பிரேம் பாய்ஷாவின் தந்தை வீரம்புரி மகாராஜ் தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தா தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது போல, வடமாநிலங்களில் தற்போது இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சொந்த தந்தையுடன் உறவா? என பெண் ஆன்மீக குருவான சாத்வி பிரேம் பாய்ஷாவினை பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
வெளியான ஆபாச வீடியோ க்ளிப் தொடர்பாக சாத்வி பிரேம் பாய்ஷா விளக்கமளித்துள்ளார். “இந்த வீடியோ முற்றிலும் உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. மற்றவர்கள் முன்னிலையில் தனது தந்தையினை கட்டிபிடித்ததை வீடியோ எடுத்து சிலர் என்னை பணம் கேட்டு மிரட்டினர். இதுத்தொடர்பாக ஜோத்பூரிலுள்ள போரானாடா காவல்நிலையத்தினை அணுகி புகார் அளித்துள்ளேன். தனது புகாரின் பேரில் என்னை மிரட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் தானாக வந்து மன்னிப்பு கேட்டதால் நாங்கள் இந்த வழக்கினை மேற்கொண்டு நடத்தவில்லை. இருப்பினும் சமீப நாட்களாக, 20 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால், இந்த வீடியோவினை வைரலாக்குவோம் என ஒரு தரப்பினர் என்னை மிரட்டி வந்தனர். அவர்கள் தான் இந்த வீடியோவினை இணையத்தில் வைரலாக்கியுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.
அக்னி பரீட்சைக்கு தயார்:
மேலும், “என் தந்தை, என்னை வளர்த்து எனக்கு கல்வி போதித்தவர். ஆபாசமாக வீடியோ வைரலாக்கப்படுவது, எனது நற்பெயருக்கு களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான். அக்னி பரீட்சைக்கு கூட நான் தயாராக உள்ளேன். அதற்கான தேதி மற்றும் நேரத்தை துறவிகள் முடிவு செய்யட்டும்” எனவும் சாத்வி பிரேம் பாய்ஷா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வீடியோ வைரல் தொடர்பாக, பெண் ஆன்மீக குருவான சாத்வி பிரேம் பாய்ஷா 3 நபர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து விசாரித்து வந்த போரானாடா போலீசார், சாத்வி பிரேம் பாய்ஷாவின் வீடியோவை வைரலாக்கிய முக்கிய குற்றவாளியான ஜோகேந்திர சியாக் படாடுவை கைது செய்துள்ளனர்.
View this post on Instagram
சாத்வி பிரேம் பாயின் மொத்த குடும்பமும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே இல்லற வாழ்க்கையினை கைவிட்டு துறவிகளாக மாறியுள்ளனர். சாத்வி பிரேம் பாய்ஷாவின் தாயார் அம்ரி பாய் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீக குரு சாத்வி பிரேம் பாய்ஷா படுக்கையறையில் தனது தந்தையுடன் தகாத முறையில் நடந்து கொள்ளுவது போன்ற வீடியோ ராஜஸ்தான் மாநிலம் உட்பட வட மாநிலங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
What's Your Reaction?






