சைபர் புல்லிங்கால் மன உளைச்சலா? இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை!
இன்ஸ்டாகிராமில் நிதி ஆலோசனைகளை வழங்கி பிரபலமான ஹரிஷ் (27) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ ஹரிஷ்
‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ (Finance With Harish) என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் செயல்பட்டு வந்தவர் ஹரிஷ். நிதி மேலாண்மை மற்றும் பணம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்த இவர், சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார்.
இந்த நிலையில், ஹரிஷ் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக அவரது தந்தை விநாயகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
யூடியூபர் மீது தந்தை புகார்
யூடியூபர் ஜேசன் சாமுவேல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிஷ் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஹரிஷ் சமூக வலைதளங்களில் சைபர் புல்லிங்கிற்கு ஆளாகி மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது தந்தை விநாயகம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜேசன் சாமுவேல் மீது ஹரிஷின் தந்தை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒருவரைக் குறிவைத்து அவதூறாகப் பேசுவது, கேலி செய்வது மற்றும் தொடர்ந்து துன்புறுத்துவது போன்ற செயல்கள் சைபர் புல்லிங் எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்தச் சம்பவத்தில் ஹரிஷின் மரணத்துக்கும் சைபர் புல்லிங்கிற்கும் தொடர்பு இருப்பதாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ள நிலையில், புகார் தொடர்பான விசாரணை விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.
What's Your Reaction?

