தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்... மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை!

தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிந்து, பவுனுக்கு ₹2,960 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலையும் குறைந்துள்ளதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Jul 8, 2026 - 10:46
Jul 8, 2026 - 10:49
தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்... மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் தொடர்ந்து நீடித்து கொண்டு வருகிறது. கடந்த 5-ஆம் தேதி வரை ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13,000க்கும்,ஒரு பவுன் ரூ.1,08,480க்கும் விற்பனை ஆனது.

நேற்று நிலவரப்படி கிராமுக்கு ரூ.160 ம்,பவுனுக்கு ரூ.1,280 ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13,400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை பொறுத்த வரை நேற்று விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.250 க்கும்,ஒரு கிலோ ரூ.2லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்து அதன்படி கிராமுக்கு ரூ.70 ம் பவுனுக்கு ரூ.560 ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,330 க்கும்,ஒரு பவுன் ரூ.1,06,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த மூன்று நாட்களாக மட்டும் கிராமுக்கு ரூ.370ம் பவுனுக்கு ரூ.2,960 ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

தங்கம் விலை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது.கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245 க்கும்,ஒரு கிலோ ரூ 2,40,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இது நகை வாங்குவோர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow