"எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது!"... நடுவர் மீது எகிப்து பயிற்சியாளர் குற்றச்சாட்டு.

உலகக் கோப்பை தொடரின் "சுற்று 16 நாக் அவுட்" போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறிய பிறகு எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹொஸாம் ஹசன் நடுவரின் முடிவுகள் குறித்து கடும்  அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Jul 8, 2026 - 10:19
"எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது!"... நடுவர் மீது எகிப்து பயிற்சியாளர் குற்றச்சாட்டு.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 67 வது நிமிடம் வரை எகிப்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இறுதிக் கட்டத்தில் அர்ஜென்டினா அபாரமாக கம்பேக் கொடுத்தது. போட்டியின் 79 வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோவும் 84 வது நிமிடத்தில் லியோனல் மெஸ்சியும் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்தனர்.

பின்னர் கூடுதல் நேரத்தின் 90+2 வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு  முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹொஸாம் ஹசன் "நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம்".  "எங்களுக்கு அநீதி இழைப்பட்டுள்ளது". எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பெனால்டி மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல அந்த முடிவு VAR மூலம் கூட சரிப்பார்க்கவில்லை. நாங்கள் அடித்த 2- வது கோலும் ரத்து செய்யப்பட்டது. ஒரு வேளை நடப்பு உலக சாம்பியன் தொடரில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது மெஸ்சி தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்காகவோ இப்படி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று குற்றம்சாட்டியுள்ளார். 

எகிப்து பயிற்சியாளரின் இந்த கருத்து தற்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கடும் விவதாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow