திரிஷா வருந்தியிருந்தால், நானும் வருந்துகிறேன் - மன்சூர் அலிகான் பேட்டி

நடிகை திரிஷாவை மதிக்கிறேன்.தனிப்பட்ட முறையில் திரிஷாவை பேசவில்லை.

Nov 23, 2023 - 15:10
Nov 23, 2023 - 18:32
திரிஷா வருந்தியிருந்தால், நானும் வருந்துகிறேன் -  மன்சூர் அலிகான் பேட்டி

நடிகை திரிஷா குறித்து பேசியது நான்தான். எந்த உள் அர்த்தமும் கொண்டு பேசவில்லை.திரிஷா வருந்தியிருந்தால், நானும் வருந்துகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகை திரிஷா கிருஷ்ணன் குறித்து சமூக வளைதளங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. 

தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர் பாலியல் அவதூறு மற்றும் திட்டமிட்டு அவதூறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த வழக்கில் இன்று (நவ 23) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது.இந்நிலையில், தான் அளித்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், நடிகை திரிஷா குறித்து எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதால், வழக்கை ரத்து செய்து தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில், மன்சூர் அலிகான் 15 நாட்களாக இருமல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை (நவ 24) ஆஜராக அனுமதிக்கும்படி ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளருக்கு கோரிக்கை விடுத்தார்.அதனால், மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியானது. 

இதையடுத்து, தான் எங்கேயும் தலைமறைவாகவில்லை என்பதால், இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை வாபஸ் பெற அனிமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி அல்லி முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். 

முன்னதாக திரிஷா குறித்த அவதூறு கருத்து குறித்து விளக்கம் அளிக்க நேற்று ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில் சென்று நோட்டீஸ் வழங்கினர்.வீட்டில் மன்சூர் அலிகான் இல்லாததால் அவரது மனைவியிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆயிரம் விளக்கு போலீசார் வழங்கிய நோட்டீஸ் குறித்து விளக்கம் அளிக்க நடிகர் மன்சூர் அலிகான் இன்று காவல் நிலையம் சென்றார்.அங்கு எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், “நடிகை திரிஷாவை மதிக்கிறேன்.தனிப்பட்ட முறையில் திரிஷாவை பேசவில்லை. எந்த உள் அர்த்தம் கொண்டும் பேசவில்லை. என் பேச்சால் திரிஷா வருந்தியிருந்தால், நானும் வருந்துகிறேன். வழக்கு விசாரணைக்கு எப்போது அழைத்தாலும்,ஆஜராக தயாராக இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow