பாபநாசம்: 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கும் அபாயம்

மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறையும், உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிரைப் பார்வையிட்டு, பூச்சி தாக்குதலிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்ற உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்

Nov 23, 2023 - 14:45
Nov 23, 2023 - 16:54
பாபநாசம்: 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கும் அபாயம்

பாபநாசம் அருகே நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு மற்றும் குருத்துப்பூச்சி தாக்குதலால் 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்படையும் நிலையில் உள்ளதாக வேதனையில் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அன்னப்பன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மெலட்டூர், நரியனூர், கோனியக்குறிச்சி, காட்டுக்குறிச்சி உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நான்கு ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மின் மோட்டார் மூலம் பாசனநீர் பெற்று விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பகுதியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், கதிர் விடும் பருவத்திலுள்ள நெற்பயிர்களில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் என்கிற குருத்துப் பூச்சிதாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது.இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறையும், உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிரைப் பார்வையிட்டு, பூச்சி தாக்குதலிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்ற உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அண்மைக்காலமாக லேசான மழை, பணி, வெயில் என அடிக்கடி ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால், சம்பா நெற்பயிர்கள் இலைச் சுருட்டுப்புழு மற்றும் குருத் துப்பூச்சிகளின்  தாக்குதலால் நெற்பயிர்களிலுள்ள இலைகள் பழுப்பு நிறமாக மாறுவதுடன், அதிலுள்ள தண்டுகளைத் துளையிட்டு விடுவதால், சூழ் பருவத்தில் உள்ள கதிர்களில் வளர்ந்து வரும் நெல்மணிகள் அனைத்தும் பதறாக மாறிவிடுவதாகவும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், இன்னமும் செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow