துப்புக் கொடுத்த இன்ஃபார்மர்... திமுக பெண் நிர்வாகி மீனா லோகு வீட்டில் திடீர் ரெய்டு...
திமுக மாநில மகளிர் அணி துணை தலைவர் மீனா லோகுவின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கியுள்ளது. இதனிடையே அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுக மாநில மகளிர் அணி துணைத் தலைவரும், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகுவின் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், மீனா லோகுவின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆனால், இந்த சோதனையில் பணம் உட்பட எந்தப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தேர்தல் பரப்புரை இறுதிக் கட்டத்தை எட்டவுள்ள நிலையில் திமுக மாநில மகளிர் அணி துணைத் தலைவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?