எத்தனை ஆண்டு ஏக்கம்.. ரஞ்சி கோப்பையை கையிலேந்துமா தமிழ்நாடு? 7 ஆண்டுகளுக்குப் பிறகு  காலிறுதிக்கு தகுதி..!

குரூப் சி பிரிவில் 28 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது.

Feb 20, 2024 - 10:59
Feb 20, 2024 - 11:00
எத்தனை ஆண்டு ஏக்கம்.. ரஞ்சி கோப்பையை கையிலேந்துமா தமிழ்நாடு? 7 ஆண்டுகளுக்குப் பிறகு  காலிறுதிக்கு தகுதி..!

7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பை காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு அணி முன்னேறியுள்ளது.  

ரஞ்சிக் கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. முதலில்  பேட் செய்த தமிழ்நாடு, 435 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பஞ்சாப் அணித் தரப்பில் சுக்விந்தர் சிங் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

பஞ்சாப் அணி,  தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஜித் ராமின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ ஆன் ஆன நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பஞ்சாப் பேட்டர் நெஹல் வதேரா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு,  7 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் குவித்த பாபா இந்திரஜித் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் குரூப் சி பிரிவில் 28 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது.மேலும் 2016-2017 சீசனுக்குப் பிறகு காலிறுதிக்கு நுழைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow