மதுப்பிரியர்கள் கவனத்திற்கு...டாஸ்மாக்கில் மது வாங்கினால் இனி ரசீது-டிஜிட்டல் முறையில் மது விற்பனை
Gpay முறையிலும் மது வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்க உள்ளது.இதனால் இனி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும், மதுபான விற்பனையை டிஜிட்டல் மூலமாக டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.294 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டிஜிட்டல் முறை விற்பனையை கொண்டு வரும் வகையில், ஆரம்ப கட்டமாக வடசென்னை, கோவை வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள 266 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறை விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளது.
இந்த டிஜிட்டல் முறை விற்பனையில் மது பிரியர்கள் மது வாங்கும்போது அதற்குரிய ரசீது டாஸ்மாக் பணியாளர்கள் மூலமாக வழங்கப்படும்.Gpay முறையிலும் மது வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?