KKR vs SRH: நடப்பு சாம்பியனுக்கு KKR-க்கு இப்படி ஒரு நிலையா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
IPL2025: ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி, இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி 10 அணிகளுடன் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. மிகவும் விறுவிறுப்பாக தொடங்கிய ஐபிஎல் இன்று 15-வது போட்டியை எட்டியுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
நடப்பு தொடரில், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைர்ரைடர்ஸ் அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவியுள்ளது. முதல் போட்டியில், ஆர்சிபி அணியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியுடனான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில், மும்பை அணியுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 3 போட்டியில் ஒருவெற்றியை பெற்ற கேகேஆர் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதரபாத்
ஐபிஎல் தொடரில் எதிரணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்து சிம்ம சொப்பனமாக விளங்கிய சன்ரைசர்ஸ் அணி, இந்த தொடரில் கடைசி 2 போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில், ஐதராபாத் 8-வது இடத்தில் உள்ளது.
இரண்டு அணிகளும் தங்களது 2-வது வெற்றிக்காக போராடி வரும் நிலையில், இன்றையப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






