என்ன மனுசன்யா..மறைந்த பெற்றோர்,மனைவிக்கு கோயில் கட்டிய மதுரை முத்து!
மறைந்த தாய், தந்தை மற்றும் மனைவிக்கு கோயில் கட்டி, 2000 பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து.

மதுரையை பூர்விகமாக கொண்ட சின்னத்திரை நகைச்சுவை கலைஞரும், நகைச்சுவை பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து அடிக்கும் ஜோக்குகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசபட்டி கிராமத்தில் மதுரை முத்து, மறைந்த தனது தாய், தந்தை மற்றும் மனைவி அவர்களுக்கு மார்பளவு உருவ சிலை அமைத்து கோவில் ஒன்றை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதிகாலையில் வழக்கம் போல யாகங்கள் வளர்க்கப்பட்டன. மதுரை முத்துவுடன் இணைந்து சின்னத்திரையில் அசத்தி வரும் பல்வேறு நகைச்சுவை பிரபலங்களும், சின்னத்திரை நடிகர்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
எந்த ஒரு சுப நிகழ்வுகளாக இருந்தாலும் மதுரை முத்து பொருத்தமாட்டில் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக ஆதரவற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொரோனா காலத்தில் இருந்தே வழங்கி வருகிறார். இன்று கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து கிராமத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு வேஷ்டி,சேலை & மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள் வழங்கினார் மதுரை முத்து.
இந்நிகழ்ச்சிக்கு தனியார் தொலைக்காட்சி பிரபலங்களான குக் வித் கோமாளி புகழ், பிக் பாஸ் வின்னர் முத்துகுமார் மற்றும் பல சின்னத்திரை நடிகர்கள் வருகை தந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தனர். இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






