காங்கிரஸில் ஐக்கியமாகும் மமதா? அப்போ திரிணாமுல் காங்., நிலை?

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சித்தாவலில் ஈடுபட்டதால், மொத்தக் கட்சியுமே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸை கலைத்து தாய் கழகத்திற்கே திரும்ப மமதா பானர்ஜி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

காங்கிரஸில் ஐக்கியமாகும் மமதா? அப்போ திரிணாமுல் காங்., நிலை?

மமதா பானர்ஜி... சாத்தியமற்ற ஒன்றை சாத்தியமாக்கியவர்.. நாட்டின் வலிமைமிக்கத் தலைவராக இருந்தவர்... தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக நீடித்தவர்... இப்படி பன்முகத்தனமை கொண்ட மமதா ஒரு இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறார். பொதுவாக தேர்தலில் தோல்வியை தழுவியதும், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதும், அதிருப்தியாளர்கள் சிலர் விலகி ஆளுங்கட்சியுடன் இணைவதும் வழக்கமான ஒன்றாகத்தான் இருந்துவருகிறது. ஆனால், அந்த கட்சி எப்படியாவது மீண்டும் விடும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் திமுக தோல்வியை தழுவினால் அடுத்த தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவும். இப்படி மாறி மாறித்தான் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் வெற்றி மற்றும் தோல்வியை சந்தித்துள்ளனர். இருந்தாலும், மீண்டு வர பல்வேறு வகையில் போராட வேண்டியதாக இருக்கும். இப்படியான ஒரு சூழல் தான் மமதாவிற்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூடாரமே ஒட்டுமொத்தமாக காலியாகி மேற்கு வங்க அரசியல் மட்டுமல்ல  இந்திய அரசியல் களத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை அமைத்த நிலையில், 80 எம்.எல்.ஏக்களை பெற்றது திரிணாமுல் காங்கிரஸ்.  அதில் 60 மமதாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்களின் ஆதரவுடன் ரிதாபிரதா, எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார்.

ஆரம்பத்தில் மாநில அளவிலான ஒரு கிளர்ச்சியாகத் தோன்றிய இது இப்போது டெல்லி வரை பரவியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் 28 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர், கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து பிரிந்து சென்று, பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியுடன் தங்களை இணைத்துக் கொள்ள அனுமதி கோரி நாடாளுமன்ற சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மமதாவும் அவரது மருமகனும் டெல்லியிலேயே முகமிட்டுள்ளதோடு, காங்கிரஸ் கட்சியுடன் இணக்கம் காட்டிக் கொண்டிருப்பது தேசிய அரசியலில் உற்றுநோக்கி பார்க்கப்படுகிறது.

இண்டியா கூட்டணியில், ராகுல்காந்தி சோனியாகாந்தியைவிடு ஒரு வலுவான தலைவராக இருந்தவர் மமதா. இப்படியான சூழலில், காங்கிரஸின் உதவியை மமதா கோருவதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் தன் கையைவிட்டு சென்றுவிட்டதால் இனி கட்சியை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதனால், மமதா தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தன்னுடைய தாய்க்கழகமான காங்கிரஸுடன் 20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள திரிணாமுக் காங்கிரஸை இணைக்க முடிவெடுத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  டெல்லி நீண்டநாட்களாக தஞ்சம் அடைந்துள்ள மமதா விரைவிலேயே தன்னுடைய முடிவு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow