புனித ரமலான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் புனித ரமலான் மாத நோன்பு குறித்து அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.
ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும்.
ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள்.
பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். இஸ்லாத்தில் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இது பார்க்கப்படுகிறது.
முகமது நபியின் ஹிஜ்ரத் அதாவது மெக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்த (கி.பி. 622) இரண்டாம் ஆண்டு அதாவது கி.பி. 624 இல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது அல்லது கட்டாயமாக்கப்பட்டது.
அன்று முதல் உலகம் முழுவதும் எந்த மாற்றமும் இல்லாமல் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நோன்பானது ஃபர்ஸ் (கட்டாயம்) ஆக்கப்பட்ட ஆண்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 622 ஆம் ஆண்டில் முகமது நபி, ஸஹாபி (தோழர்கள்) உடன் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு குடிபெயர்ந்தார்.
இஸ்லாத்தில் இது ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் நடந்த தேதியிலிருந்து, முஸ்லிம்களின் ஆண்டு எண்ணும் பணி தொடங்கியது. ஹிஜ்ரியின் இரண்டாம் ஆண்டில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மத நூலான குர்ஆனால் கட்டாயமாக்கப்பட்டது
ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.
ஜகாத் கடமையானவர்கள்:
பொருள் அவரின் கையில் இருக்க வேண்டும் (அதை செலவழிக்கும் முழுத்தகுதி இருக்க வேண்டும்) - Ownership.பொருள் ஜகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) அடைந்திருக்க வேண்டும் - Asset must be equivalent to Nisab.தன் அடிப்படைத் தேவைக்கு போக மீதம் இருக்க வேண்டும் (தான் பயன்படுத்தும் உடை, வீடு, வாகனம் ஆகியவற்றின் மீது ஜகாத் இல்லை) - Asset must be in excess of basic necessity.
கடனில்லாமல் இருக்க வேண்டும் - Free from debts. பொருள் வளர்ச்சியடையக் கூடியதாக இருக்க வேண்டும். தங்கம், வெள்ளி எந்த நிலையில் இருந்தாலும் (ஆபரணமமாகவோ அல்லது பொருளாகவோ) ஜகாத் கடமையாகும் - Potential of Growth. அதே போன்று விலை மதிக்க முடியாத கற்கள் (Precious Stones) முத்து, மரகதம் போன்றவற்றில் வளர்ச்சி இல்லாததால் ஜகாத் கடமையாகாது. ஆனால், வியாபாரத்திற்காக இருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டும். ஜகாத் கொடுக்க வேண்டிய நகையோ அல்லது பணமோ ஒருவரிடம் ஒரு வருடம் இருந்திருக்க வேண்டும் - One Year must elapse over the asset.
What's Your Reaction?

