இவரை ஹீரோவாக்கியதால் நாடு நாசிமாகிவிட்டது.... அப்ஜித் தீப்கே அதிரடி பேச்சு...!
நீட் போராட்டம் எதிரொலியால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில் கரப்பான் பூச்சி கட்சியின் அபிஜீத் தீப்கே இந்த வெற்றியின் மூலம் என்னை ஹீரோ ஆக்காதீர்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனக் கோரி, கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்கள் இதனை தங்களின் முதல்கட்ட வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் வரலாற்றில், போராட்டங்களின் அழுத்தத்துக்கு பணிந்து ஓர் அமைச்சர் பதவி விலகியிருப்பது இதுவே முதல்முறை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்ட நிகழ்விடத்தில் பேசிய சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, “இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குக் கிடைத்த வெற்றி. ஜனநாயகம் வென்றுள்ளது. ஆனால், தர்மேந்திர பிரதான் பதவி விலகியதற்காக என்னை ஹீரோவாக மாற்ற வேண்டாம். ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடு நாசிமாகிவிட்டது. அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது” என்றார்.
மேலும், மக்களால் மட்டுமே வலுவான ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என்றும், தனிநபர் வழிபாட்டை விட பொறுப்பேற்பதே முக்கியம் என்றும் அவர் கூறினார்.
நீட் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், தில்லி காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அபிஜீத் தீப்கே தெரிவித்தார். மேலும், ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் மீது தில்லி காவல்துறை தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?