நகை வாடிக்கையாளர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sep 4, 2026 - 10:33
நகை வாடிக்கையாளர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை!
Gold Price Today

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. இதைத் தொடர்ந்து, 2-ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து நேற்று (03.09.2026), தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,240-க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நேற்றும் இன்றும் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow