நீட் விவகாரம்: புதிய மசோதாவை தாக்கல் செய்த மத்திய அரசு...!
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் கூச்சல் காரணமாக நாடாளுமன்றத் மழைக்காலக் கூட்டத்தொடர் தினமும் பகல் 12 மணி அல்லது குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்தத் தொடரானது ஆகஸ்ட் 13 வரை மொத்தம் 25 நாட்களில் 19 அமர்வுகளாக திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உடனே விவாதிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மதியம் 12 மணிக்கு இரு அவைகளும் கூடின. மக்களவை மீண்டும் கூடிய நிலையில் பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா 2026 மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. வினாத்தாள் கசிவுகள்,தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்த வரையில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். மேலும் திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறையும் ரூ 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். அதனைத் தொடர்ந்து மேல் முறையீடு வழக்குள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் என்றும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் போன்ற அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
மசோதா அறிமுகத்தின்போது அதை தொடர்ந்தும் ஜூலை 20 அன்று மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தியும் மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதராங்கள் கிடைத்துள்ளன.இதனால் 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
What's Your Reaction?