"ஆரம்ப சுகாதார நிலைத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லை"  நீலகிரியில் பரிதாபமாக உயிரிழிந்த பெண்...

நீலகிரியில் 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mar 15, 2024 - 15:54
Mar 15, 2024 - 21:24
"ஆரம்ப சுகாதார நிலைத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லை"  நீலகிரியில் பரிதாபமாக உயிரிழிந்த பெண்...

நீலகிரியில் 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொளப்பள்ளி அருகே நூலக்குண்ணு கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவரின் மனைவி வேளாங்கண்ணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகன் கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் உடனே கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளார். 

இதையடுத்து வேளாங்கண்ணியின் மகன், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த அவசர ஆம்புலன்ஸை அழைத்த போது, அதில் ஓட்டுநர் இல்லை. உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு அவரது மகன் தொடர்பு கொண்டு ஒன்றரை மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் வேளாங்கண்ணி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த வேளாங்கண்ணியின் உறவினர்கள் மருத்துவர்  மற்றும் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருத்துவம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow