தற்காலிக கால்நடை மருத்துவர்கள் நீக்கம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணியில் இருந்து நீக்குவது தொடர்பாக துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov 26, 2024 - 18:34
Jan 18, 2025 - 06:34
தற்காலிக கால்நடை மருத்துவர்கள் நீக்கம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணி நீக்கம் தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

மதுரையைச் சேர்ந்த கால்நடை  மருத்துவர் அருள்ஜோதி உள்ளிட்ட 83 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு கால்நடை மருத்துவமனைகளில் உதவி மருத்துவர்கள் பணி நியமனம் கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் நடைபெறவில்லை. இதனால் காலி பணியிடங்கள் தற்காலிக மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட்டன.

தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோர முடியாது. இருப்பினும் எதிர்காலத்தில் நடைபெறும் கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமனத்தில் ஆண்டிற்கு ஐந்து  மதிப்பெண் வீதம் எத்தனை வருடம் பணியாற்றினார்களோ அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம் என்றும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், தற்காலிக பணியாளர்கள் பணியில் தொடர முடியாது என உத்தரவிட்டது.

இதனிடையே கடந்த 2022 -ஆம் ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையம் 731 உதவி கால்நடை மருத்துவர்கள்  பணியிடங்களுக்கு தேர்வு நடத்த  அறிவிப்பானை வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற நாங்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வில் வெற்றி பெற்றோம். இதனைத் தொடர்ந்து தேர்ச்சியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நாங்கள் அனைவரும் விகிதாச்சார  அடிப்படையில் பணி நியமன காத்திருப்போர் பட்டியலில் உள்ளோம். 

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு படி தற்காலிக  மருத்துவர்கள் 187  பேர் நிரந்தரம் ஆக்கப்பட்டனர். தகுதியற்ற  57 மருத்துவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.  மேலும் 187 மருத்துவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்று வரை  தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் .இதனால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள எங்களுக்கு பணி நியமனம் வழங்க முடியாத சூழல் உள்ளது. முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வை எதிர்கொண்டு நாங்கள் காத்திருக்கின்றோம்.  

lineslot88 login

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தற்காலிக ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால் எங்களுடைய பணி நியமனம்  பாதிக்கப்படுகிறது. எனவே சட்டவிரோதமாக தொடர்ந்து பணியில் இருக்கும் 187 கால்நடை மருத்துவர்களை நீக்கிவிட்டு எங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மனுதார்கள் கோரிக்கை தொடர்பாக வரும் 28- ஆம் தேதி துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் உரிய முடிவு எடுக்கப்படும். அது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்.


இதனை பதிவு செய்த நீதிபதி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow