மயிலாடுதுறையில் ஆட்டம் காட்டும் சிறுத்தை... 6 ஆவது நாளாக தொடரும் வனத்துறையின் தேடுதல் வேட்டை...

Apr 8, 2024 - 11:46
மயிலாடுதுறையில் ஆட்டம் காட்டும் சிறுத்தை... 6 ஆவது நாளாக தொடரும் வனத்துறையின் தேடுதல் வேட்டை...

மயிலாடுதுறையில் பிடிபடாமல் 6 நாட்களாக ஆட்டம் காட்டி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கேமரா, கூண்டு பொருத்தி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் கடந்த 2ஆம் தேதி சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. அதனால் அந்தப் பகுதிகளில் வனத்துறையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறுத்தை நேற்று மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக, அப்பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து நேற்று அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் இன்று காலை வனத்துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது, கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை.

அதே வேளையில் காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மசினகுடியில் டி23 புலி பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகியோர் காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow