சென்னை குடிகாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: காலி சரக்குபாட்டிலை திருப்பி கொடுத்தல் ரூ.10 கிடைக்கும்
நாளை முதல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ 10 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை போக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீலகிரியில் உள்ள கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த திட்டத்தின்படி விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது ரூ.10 கூடுதலாக விற்க வேண்டும். இதையடுத்து வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும்பட்சத்தில் ரூ.10 அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்.
தற்போது பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி மற்றும் குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், தலைநகர் சென்னையில் காலிபாட்டில்களை திருப்ப பெறும் திட்டம் நாளை முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் காலி சரக்கு பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் ரூ.10 திருப்பி கொடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?

