பேருந்து - டேங்கர் லாரி மோதி கோர விபத்து... 21 பேர் சம்பவ இடத்திலேயே பலி...!
ஆப்கானிஸ்தானின் ஹெராட் - காந்தகார் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெராட் - காந்தகார் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிரிஷ்க் மாவட்டத்தில் இன்று(மார்ச்-17) காலை பேருந்து ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி மீதும் அப்பேருந்து மோதியதால் தீ பிடித்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் சென்ற 16 பேரும், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரும், கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரியில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் 38 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் கிரிஷ்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?