"மத்திய கிழக்கு மக்கள் ஆபத்தில் உள்ளனர்" - ஐ.நா எச்சரிக்கை !

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை சுட்டிக்காட்டி மத்திய கிழக்கு மக்கள் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Apr 15, 2024 - 07:51
"மத்திய கிழக்கு மக்கள் ஆபத்தில் உள்ளனர்" - ஐ.நா எச்சரிக்கை !

கடந்த 1ம் தேதி சிரியாவில் உள்ள டமாஸ்கசின் ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தங்களது முக்கிய போர் தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடியாக 14ம் தேதி இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. இதில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளித்த நிலையில், ஆதரவு தொடர்ந்தால் அமெரிக்கா மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்தது.

இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் சூழலை சுட்டிக்காட்டி ஐநா பொதுசெயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதில், மத்திய கிழக்குப் பகுதியே அபத்தில் உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் பேரழிவுகரமான முறையில் மோதலின் ஆபத்தை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து ஈரானுக்கு கண்டனம் தெரிவித்த அவர், உடனடியாக போர் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்துக்கு எதிராக ஐ.நா அதிகாரங்களை பயன்படுத்த உறுப்பினர்களுக்கு உரிமையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு வலியுறுத்தியதோடு, அனைத்து பிணைக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்து மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow