நாதக ஒரு பிரிவினைவாத இயக்கம்?-திருச்சி எஸ்.பி வருண் குமார்
நாம் தமிழர் கட்சியினால் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்
நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி வருண் குமார் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின்பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் படியும், நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று சைபர் க்ரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கும்படி வருண் குமாருக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியிருந்தது. திருச்சி எஸ்.பி வருண் குமார் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி எஸ்பி வருண்குமார், “நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம் என்றும் நாம் தமிழர் கட்சியினால் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனவும் மாநாட்டில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் நாதக திருச்சி எஸ்.பி வருண் குமார் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
What's Your Reaction?