விட்றா ஏர்போட்டுக்கு பஸ்-அ..டாக்சி கிடைக்காமல் தவித்த பயணிகள்.. பிக்-அப் செய்ய விரைந்த அரசு பேருந்து

கனமழை காரணமாக கால்டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்காமல் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் மாநகர பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர். 

Oct 16, 2024 - 11:50

வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து  விமான நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளைக்கும் விமான நிலையத்திற்குள் சென்று வரும் வகையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தவர்கள் திடீரென அரசு பேருந்தை கண்டதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது போன்ற மழை நேரங்களில் அரசு பேருந்து விமான நிலையத்திற்குள் வந்து பயணிகளை அழைத்துச் செல்வது வரவேற்கதக்கது பொதுமக்கள் தெரிவித்தனர். 

தொடர் மழை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி, சேலம், சீரடி செல்ல வேண்டிய விமானம் உள்ளிட்ட நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow