சீமான் மனைவி அரசியல் என்ட்ரி? குடும்ப அரசியலை எதிர்த்த சீமான்...விமர்சிக்கும் நெட்டிசன்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பிரதான கட்சிகளிடையே எப்போதும் போலக் கூட்டணி, தொகுதி உடன்பாடுகளில் இழுபறி நீடிக்கும் சூழலில், வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து வருகிறது நாம் தமிழர் கட்சி.  

Feb 23, 2024 - 11:12
Feb 23, 2024 - 15:44
சீமான் மனைவி அரசியல் என்ட்ரி?  குடும்ப அரசியலை எதிர்த்த சீமான்...விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சீமான் மனைவி அரசியல் என்ட்ரி?  குடும்ப அரசியலை எதிர்த்த சீமான்...விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சீமான் மனைவி அரசியல் என்ட்ரி?  குடும்ப அரசியலை எதிர்த்த சீமான்...விமர்சிக்கும் நெட்டிசன்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பிரதான கட்சிகளிடையே எப்போதும் போலக் கூட்டணி, தொகுதி உடன்பாடுகளில் இழுபறி நீடிக்கும் சூழலில், வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து வருகிறது நாம் தமிழர் கட்சி.  வேறு எந்த கட்சியிலும் அளிக்கப்படாத பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்பதைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த தேர்தலிலும் 50% பெண்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி உள்ளிட்ட 40தொகுதிகளில் தற்போது வரை கிட்டதட்ட 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது . சில இடங்களில் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சி இதுவரை தனித்தே அத்தனை தேர்தல்களையும் சந்தித்த நிலையில், தமிழ்நாட்டில் கணிசமான வாக்கு வங்கிகளையும் உருவாக்கி வைத்துள்ளது . தமிழ்த் தேசியம் என்ற ஒன்றைப் புள்ளியில் மட்டும் நிற்கும் அக்கட்சி வேறு நிலையான கொள்கைகள் இல்லாதது அக்கட்சிக்கு சில காலங்களாகப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு 40 தொகுதிகளுக்குமான கட்சி சட்ட ஆலோசகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு சட்ட ஆலோசகர்களில் ஒருவர் சீமானின் மனைவி கயல்விழி என்பது குறிப்பிடதக்கது. திராவிட இயக்க மூத்த தலைவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள்தான்  கயல்விழி,  அவரை கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது அவரவர் உரிமை. ஆனால் சீமான் ஆரம்பம் முதலே குடும்ப அரசியலைக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது தனது மனைவியின் வருகை, அரசியலுக்கு அச்சாரமா என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் தனது மனைவியின் சகோதரர் அருண்மொழித்தேவன் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், அவர் ஏற்கனவே 2019 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

நாம் தமிழர் கட்சியின் மூத்த உறுப்பினர் தடா சந்திரசேகரின் படத்திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது அதில் சீமான் மனைவி கயல்விழி முதன்முறையாக மேடையேறிப் பேசினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் அரசியலுக்கு வருவாரா கயல்விழி என்ற கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் சிரித்து விட்டு நகர்ந்தார்.  தற்போது வழக்கப்பட்டுள்ள பொறுப்பை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு விரைவில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.

-மா.நிருபன் சக்கரவர்த்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow