+1 மாணவிக்கு காதல் தொல்லை... எலிமருந்து சாப்பிட்ட மாணவி.. கடலூரில் கம்பி எண்ணும் காதல் மன்னன்

சிதம்பரம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Apr 3, 2024 - 12:56
+1 மாணவிக்கு காதல் தொல்லை... எலிமருந்து சாப்பிட்ட மாணவி.. கடலூரில் கம்பி எண்ணும் காதல் மன்னன்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயன். இதே ஊரைச் சேர்ந்த அரசங்குட்டை தெருவை சேர்ந்த மாணவியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். 16 வயதான அந்த சிறுமி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

தினமும் அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி பலமுறை நெருக்கடி கொடுத்துள்ளார். விஜயனின்  காதலை ஏற்காத மாணவி தனது தாய் தந்தையிடம் சொல்லிவிடுவேன் என்று கூறி பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனை ஏற்காத விஜயன் மாணவிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டார். உயிர் பயத்தில் நடந்த சம்பவங்களை தனது தாய் தந்தையிடம் நடந்த விஷயங்களை கூறினர் அந்த மாணவி. 

இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

மாணவியின் பெற்றோர்கள் ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையில் புகார் அளித்ததை அடுத்து ஆய்வாளர் ராபின்சன் போக்சோ சட்டத்தின் கீழ் விஜயனை கைது செய்து விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow