மும்பையில் இருந்துட்டு மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்: ராஜ்தாக்கரே பேச்சால் பரபரப்பு!
மும்பையில் இருந்துக் கொண்டே மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள் என மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (Maharashtra Navnirman Sena) தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில் நேற்றையத் தினம் (மார்ச் 30) குடி பத்வா பேரணியில் (Gudhi padwa rally) பங்கேற்று பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
சத்ரபதி சம்பாஜிநகரில் அமைந்துள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சமீபத்தில் நடந்த போராட்டத்தை மேற்கொள் காட்டி கூட்டத்தில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, “வரலாற்றை தெரிந்துக் கொள்ள வாட்ஸ்-அப்பில் பகிரப்படும் தகவல்களை நம்பாதீர்கள். புத்தகங்கள் வாயிலாக வரலாற்றினை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். சமூக ஊடகங்களில் உருவாக்கப்படும் பிரச்சாரங்களுக்கு நேரத்தை செலவிடுவதை நிறுத்தி, நம் மாநிலம் எதிர்க்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய ராஜ் தாக்கரே, "மாநிலத்திலுள்ள வங்கிகள் மற்றும் இதர அலுவலகங்களில் மராத்தி மொழி பயன்பாட்டினை உறுதி செய்யுங்கள். மராத்தியைப் புரிந்து கொள்ளவோ? பேசவோ முடியாது? என்று சொல்ல அவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? மராத்தி மகாராஷ்டிராவின் மொழி, அதை அனைவரும் மதிக்க வேண்டும். மும்பையில் இருந்துக் கொண்டு மராத்தி பேச மறுத்தால், அவர்களை கன்னத்தில் அறையுங்கள். தமிழ்நாட்டைப் பாருங்கள்.. மத்திய அரசு இந்தியை திணிக்க முயலும் போது, அவர்கள் தங்கள் தாய் மொழிக்காக எவ்வளவு ஒற்றுமையுணர்வுடன் செயல்படுகிறார்கள்.”
”மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு எப்போதும் முன்னேற முடியாது. நாம் உண்மையில் முன்னேற்றம் அடைய விரும்பினால் நமது ஒற்றுமையுணர்வு மேலோங்க வேண்டும். நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என” தெரிவித்துள்ளார்.
Read more: Kunal Kamra: முதலில் சிவசேனா.. இப்போ T Series.. ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கு தொடரும் சிக்கல்கள்
What's Your Reaction?






