சிறுமியிடம் சில்மிஷம்..நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பல மோசமான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலையில், பணியிடத்தில், வீட்டில் கூட பெண்கள் பாதுகாப்பான சூழலில் இருக்கமுடிவதில்லை. இப்படி தினம் தினம் ஏதோ ஒரு பாலியல் தொடர்பான செய்தி வந்துக்கொண்டே இருக்கிறது. அதில், சென்னையில்
2023ம் ஆண்டு, சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த 13 வயது சிறுமிக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக, அச்சிறுமியின் தாயார் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது W-23 ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 38 வயது நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி அவரி சிறையிலும் அடைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (26.09.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்ட 38 வயது நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதிக்கப்படுகிறது. அவர் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
What's Your Reaction?