தீபாவளி நேரத்தில் தாறுமாறாகும் விலைவாசி....விஜய் அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்-உதயநிதி!
தமிழ்நாட்டில் அரிசி,பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து மக்கள் அவதிப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் அரிசி,பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மளிகைப் பெருட்களின் விலை உயர்வு தொடர்பான நாளிதழ்களில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டியும்,தவெக அரசை கண்டித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது,
”முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்.
பொருட்களின் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாவது, ”மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது. இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.
வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்”.
What's Your Reaction?

