விஜய்யின் அரசியல் பிரவேசம்! அரசியல்வாதிகள் கூறுவது என்ன?

Feb 2, 2024 - 18:16
Feb 2, 2024 - 18:21
விஜய்யின் அரசியல் பிரவேசம்!   அரசியல்வாதிகள் கூறுவது  என்ன?

பல விமர்சனங்களுக்கு பிறகு  நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.  அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே ’விஜய் அரசியல்லுக்கு வருவாரா? வந்தால் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் ? அவருக்கு அரசியல் அனுபவம் உள்ளதா ? என்றெல்லாம் இந்த விவகாரம்  குறித்து அரசியல்  தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் வட்டத்தில் பெரும் பேசுபொருளாகியிருந்தது.

இன்னிலையில் இன்று  அந்த விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வமாக  ‘தமிழக வெற்றி கழகம்’ என தனது கட்சியின் பெயரை அறிவித்து தனது அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளார் நடிகர் விஜய்.

நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கும் சமயத்தில் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது பல விமர்சனங்களை ஈர்த்துள்ளது.  மேலும் இது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.  அவை பின்வருமாறு:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: 

”இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் கட்சி துவங்க முழு உரிமை உள்ளது. அந்த வகையில் இன்று அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு நாம் அனைவரும் இணைந்து பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வோம்” 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:   

“விஜய் கட்சியால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை; அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தி கரையேறுபவர்களும் உண்டு, மூழ்குபவர்களும் உண்டு. தமிழக வெற்றி கழகத்தால் அதிமுக வாக்குவங்கி பாதிக்காது ” 

பாஜக மாநில தலைவர் அண்னாமலை:-
 
”மக்களுக்காக பணியாற்ற கட்சி தொடங்கியிருக்கும் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில்  மகிழ்ச்சி அடைகிறேன்”

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் :

“எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழ்நாட்டில் வலம் வருவார் என  எதிர்பார்க்கிறேன்”

 விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர்  திருமாவளவன்:-

“யாரும் அரசியலுக்கு வரலாம், பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம், அதுவே ஜாநாயகம்” 


காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை:- 

“விஜய் கட்சி தொடங்கியிருப்பதை வரவேற்கிறேன்; சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும்” 

இவ்வாறு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க   |  தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குமா ?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow