பள்ளிகளில் மாணவர்களை அடிக்கக் கூடாது... பள்ளிக்கல்வித்துறை ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!
பள்ளிகளில் மாணவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை காரணமாக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த தண்டனையால், மாணவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளிகளில் தண்டிக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்டவை குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
மாணவர்கள் தரப்பில் பிரச்னைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து ஆலோசிக்க வேண்டும். மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை நடத்தி தெளிவுப்படுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்" இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?