காற்றழுத்து தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் கொட்டித்தீர்த்த மழை...
காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் அதிகாலை காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் அதிகாலை காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அமைந்தகரை, சென்ட்ரல், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதேபோல் காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, கீழம்பி, ஒலி முகமது பேட்டை, வெள்ளைகேட், பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி,
தொரப்பாடி, பாகாயம், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் மழை நீருடன் கலந்து கழிவு நீர் வெளியேறி குளம் போல் காட்சியளித்ததால் பேருந்தில் செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கனமழை காரணமாக கழிவுநீருடன் மழைநீர் கலந்து மருத்துவமனை முழுவதும் உள்ளே புகுந்ததால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?