இடைத்தேர்தல் போட்டியா? வைகோ எடுத்த எதிர்பாராத முடிவு..!

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மதிமுக பொதுக்குழு எடுத்துள்ள முடிவை அறிவித்துள்ளார் வைகோ.

Jul 2, 2026 - 20:00
இடைத்தேர்தல் போட்டியா? வைகோ எடுத்த எதிர்பாராத முடிவு..!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து 50 நாட்கள் கடந்த நிலையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் பனையூரை நோக்கி சனி பிரவேசம் எடுத்து வரும் நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுத்து அறிவாலயத்தை அனாதையாக்கிக் கொண்டிருக்கிறது தவெக என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

இத்தகையச் சூழலில், கடைசியாக திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைந்த்த்து வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். திமுக கூட்டணியில் நின்று உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 2 எம்ன்.எல்.ஏக்களை பதவி விலக சொல்லி தவெக கேட்டுக் கொண்ட்தற்கிணங்க, வைகோவும் தன்னுடைய எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக்க் கூறப்படுகிறது.

ஆனால், அந்த 2 எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்ட்தால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளார் வைகோ.

இந்த நிலையில், வைகோவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வைகோ எடுக்கப்போகும் முடிவு என்ன என்று எதிர்பார்த்த நிலையில், இடைத்தேர்தல் குறித்த முக்கிய முடிவை அறிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக எங்களை மிரட்டுவது போன்று நடத்தி, உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தம் செய்தது. இப்போது குதிரை பேரம் பற்றி பேசுகிறது. ஆனால், அதை ஆரம்பித்ததே திமுகதான். எங்கள் கட்சியை சேர்ந்த கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, நான்காவது நாளே திமுகவில் சேர்த்தனர்.

திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் இதை பேசவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது பேசியிருந்தால் மறுநாளே கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்போம். மற்ற கூட்டணிக்கு சென்றிருந்தால் அதையும் விமர்சித்திருப்பார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய வைகோ, “ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியதற்கு ஒவ்வொரு காரணம் உள்ளது. எங்களை திமுகவினர் மோசமாக நடத்தினார்கள். அதனால்தான் வெளியேறினோம். விலகிச் சென்றவர்களை விமர்சிப்பது என் வழக்கமல்ல. சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வன், ராஜேந்திரன் ஆகியோர் வாழ்க. அவர்கள் என் முதுகில் குத்தவில்லை.

என் நெஞ்சில்தான் குத்திவிட்டார்கள். உயிரை கொடுக்கும் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள்தான் கட்சியை காப்பாற்றுவார்கள். இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்என்று  அறிவித்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற வைகோவின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்றும், தேவையில்லாமல் மாற்றி மாற்றி பேசு வைகோ தன்னுடைய ஆளுமை நிலையை இழந்து வருகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow