’சூது கவ்வும்’ இயக்குநருடன் இணைந்த கார்த்தி... வெளியான பூஜை கிளிக்ஸ்..!

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் ’கார்த்தி 26’ படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இத்திரைப்படத்திற்கு பூஜை போட்ட காணொளிகள் வெளியாகியுள்ளன.  

Mar 8, 2024 - 20:32

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி, அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் இணைய உள்ளார். பெயரிடப்படாத இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்திற்கு பூஜை போட்ட காணொளிகளை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்களுடன் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.

புதுப்புது பாணி படங்களை எடுத்து மக்கள் மத்தியில் சிறந்த இயக்குநராக இருக்கும் நலன் குமாரசாமியுடன் முதன்முறையாக கார்த்தி இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow