மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம்! திறந்து வைத்தார் முதலமைச்சர்.. ஜொலி ஜொலிக்குதே பிரம்மாண்டமாய்!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இத்துடன் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட இரண்டு நினைவிடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 26-ம் தேதி) திறந்து வைத்தார். கருணாநிதி நினைவிட பகுதியில் கலை, இலக்கியம், அரசியலில் முத்திரை பதித்ததின் அடையாளமாக கருணாநிதியின் நினைவிடத்தில் மூன்று வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக கருணாநிதியின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உலகம் அருங்காட்சியகம் என்ற பெயரிலான பிரம்மாண்டமாக அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.
விழாவின் தொடக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் பற்றி, அவரது குரலிலேயே ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி, அமைச்சர்கள், சேகர்பாபு, எ.வ. வேலு, வைகோ, கவிஞர் வைரமுத்து, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா. மற்றும் முக்கிய அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?