ஜனநாயகத் திருவிழா.. இந்தியா ஆட்சியமைக்கும்.. அப்பாவு உறுதி.. ஜனநாயகக் கடமையாற்ற எடப்பாடி அழைப்பு
அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் வாக்களியுங்கள் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி உள்ளிட்டோர் காலையிலேயே முதல் ஆளாக சென்று தங்கள் ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர்.
நாடு முழுவதும் 102 லோக்சபா தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் வாக்களியுங்கள்" வேண்டுகோள் விடுத்தார்.
அப்பாவு: சென்னை சாலிகிராமம் வாக்குச்சாவடியில் அமைச்சர் கே.என்.நேரு ஜனநாயகக் கடமையாற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் I.N.D.I.A. ஆட்சியை பிடிக்கும் என உறுதியளித்தார்.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது மனைவி, மகன், மருமகளுடன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஜெயக்குமார்: சென்னை மந்தவெளியில் வாக்குச்சாவடியில் வாக்களித்த திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2024 மக்களவைத் தேர்தல், தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான தேர்தல் என தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன்: சென்னை சாலிகிராமத்தில் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மறக்காம ஓட்டு போடுங்க".. "ஓட்டு போடுவது நாட்டுக்கு நல்லது - மறக்காம ஓட்டு போடுங்க" என்று கூறினார்.
தமிழச்சி தங்கபாண்டியன்: சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது "இந்தியாவின் 2வது சுதந்திரப் போராட்டத்துக்கான தேர்தல்" என்று கூறினார்.
கே.என்.நேரு: சென்னை சாலிகிராமம் வாக்குச்சாவடியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார் அப்போது அவர், "மத்தியில் I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
What's Your Reaction?