ஆந்திரா உட்பட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

4 மாநிலங்களுக்கும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Mar 16, 2024 - 19:40
ஆந்திரா உட்பட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவை தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம் உட்பட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். 

ஆந்திரப் பிரதேசம் :
175 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி,  

ஏப்ரல் 8 : வேட்புமனு தாக்கல் தொடக்கம் 
ஏப்ரல் 25 : வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 
ஏப்ரல் 26 : வேட்புமனு பரிசீலனை  
ஏப்ரல் 29 : வேட்புமனுவை திரும்பப் பெற கடைசிநாள்
மே 13 : வாக்குப்பதிவு 
ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை 


ஒடிசா :
147 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

மே 13 : முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு
மே 20 : இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு
மே 25 : மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு
ஜூன் 1 : நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு
ஜூன் 4 : வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு 

சிக்கிம் :
32 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
அருணாச்சலப் பிரதேசம் :
60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 19-ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow