விஷமான ஆமைக்கறி... 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!
தான்சானியாவில் ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா நாடான தான்சானியாவில் கடந்த மார்ச் 5ஆம் தேதி 87 பேர் மேற்பட்டோர், கடலில் கிடைத்த அரிய வகை ஆமையைச் சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள். அந்த ஆமையின் கறியில் செலோண்டாக்சிஸம் என்ற விஷத்தன்மை இருந்ததால், சாப்பிட்ட அனைவருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சையிலிருந்த அவர்களில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என 9 பேர் பலியாகினர். மேலும், 78 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள அதே நேரம், சில வகை ஆமைகள் நச்சுத்தன்மை கொண்டவை என்பதால், அவற்றினை உண்ணக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?