சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து :15 பேர் உயிரிழப்பு- 44 பேர் படுகாயம்
இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கிழக்கு சீனாவில் நான்ஜிங்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 44-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஷாங்காயிலிருந்து வடமேற்கில் உள்ள நான்ஜிங் யுஹுவாடை பகுதியில் 8 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் யுஹுவாடையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 44 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். கடந்த சில மாதங்களாக சீனாவில் தீ விபத்துகள் அதிகம் நிகழ்ந்து வரும் நிலையில், அரசு உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
What's Your Reaction?