பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கட்சி முன்னிலை-எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

நவாஸ் ஷெரிஃப் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு

Feb 9, 2024 - 10:38
Feb 9, 2024 - 17:48
பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கட்சி முன்னிலை-எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில், சிறையில் இருக்கும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சஃப் கட்சி முன்னிலை வகிக்கிறது.

மிகுந்த பரபரப்புக்கு இடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நிறைவடைந்தது. மொத்தமுள்ள 336 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காததால், அக்கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். தேர்தலையொட்டி, அங்கு இணையச் சேவை வழங்குவது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் நிலவியது.

நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 150 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், நவாஸ் ஷெரிஃப் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனநாயகவாதியாக நம்பகத்தன்மையை பெற அவருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow