நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை: துறை அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாஹூ அறிவுரை.!

Feb 6, 2024 - 20:28
Feb 6, 2024 - 20:43
நாடாளுமன்ற தேர்தல்  பணிகள் குறித்து ஆலோசனை:  துறை அதிகாரிகளுக்கு   சத்யபிரதா சாஹூ அறிவுரை.!

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து மாநிலங்களிலும்,  தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், இன்று  மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த  ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தேர்தல் துறை அதிகாரிகள்,  வருமானவரித்துறை,  சுங்கத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை,  உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் பங்கேற்றனர். 

இதனைத்தொடர்ந்து,  நாளை (பிப்ரவரி-7) காலை 9 மணி முதல் மாலை வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆணையர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.  

எனவே, இது குறித்து ஆலோசிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தயாராக இருக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுறுத்தி உள்ளார்.

இதையும்  படிக்க  | பணிப்பெண்ணை துன்புறுத்திய விவகாரம்: திமுக எம்.எல்.ஏ- மகன், மருமகளின் ஜாமின் மனு தள்ளுபடி.!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow