தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் ஊழல்: ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை.!

“டி.ஆர்.பாலு பொது இடத்தில் எல்.முருகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்”

Feb 6, 2024 - 22:00
Feb 7, 2024 - 12:29
தமிழக அரசின்  பொங்கல் தொகுப்பில் ஊழல்:  ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை.!

பொங்கலுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இலவச வேட்டியில் அமைச்சர் ஆர்.காந்தி ஊழல் செய்திருப்பதாக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’எண் மண் என் மக்கள்’ நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.  அந்த நிகழ்ச்சியில் பொது மக்களிடம் பேசிய அண்ணாமலை: "அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ராணிப்பேட்டையில் உள்ள குரோமிய கழிவுகள் மத்திய அரசின் நிதியில் முழுமையாக அகற்றப்படும்", என உறுதியளித்தார். 

அதோடு,  தமிழக அமைச்சர் ஆர்.காந்தி கெட்ட வார்த்தை பேசுவதில் 35 அமைச்சர்களில் முதலிடத்தில் உள்ளார் எனவும் சாராயம் காய்ச்சி குண்டர் சட்டத்தில் கைதானவர் எனவும் விமர்சித்தார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,..  நாடாளுமன்றத்தில் அமைச்சர் எல்.முருகனை  'Unfit' என பேசிய திமுக எம்பி  T.R.பாலுவிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் திமுக எம்பி T.R.பாலு பொது இடத்தில் அமைச்சர் எல்.முருகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இது எல்முருகனுக்கு எதிரான கருத்து இல்லை என்றும் அவர் சார்ந்த சமுதாயத்திற்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். 

தகுதியில்லாதவர்'.. வாயை விட்ட டிஆர் பாலு.. லோக்சபாவில் என்ன நடந்தது? எல்  முருகன் முக்கிய விளக்கம் | Union Minister of State L Murugan alleged that  TR Balu called me unfit ...

தொடர்ந்து பேசுகையில்,  சமீபத்தில் பொங்கலை ஒட்டி இலவச வேட்டி வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்த அவர், 100 சதவிகிதம் காட்டனில் செய்யப்பட வேண்டிய வேட்டியை 78% பாலிஸ்டர்யிலும் 22 சதவிகிதம் மட்டுமே காட்டனிலும் தயாரித்து அமைச்சர் ஆர். காந்தி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரத்தை வெளியிட்டார். இது தொடர்பாக நாளை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட உள்ளதாகவும்  தெரிவித்தார்.

பொங்கல் தொகுப்பில் அரசு சார்பாக அளிக்கப்படும் வேட்டி வழங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக  அண்ணாமலை குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க  |  பணிப்பெண்ணை துன்புறுத்திய விவகாரம்: திமுக எம்.எல்.ஏ- மகன், மருமகளின் ஜாமின் மனு தள்ளுபடி.!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow