ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து தஞ்சை போலீஸ் விழிப்புணர்வு

ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்திய காவல் ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து அனுப்பி வைத்தார்.

Jan 4, 2024 - 14:39
Jan 4, 2024 - 22:09
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து தஞ்சை போலீஸ் விழிப்புணர்வு

தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரோஜாப்பூ கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்திய காவல் ஆய்வாளர் சந்திரா வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து அனுப்பி வைத்தார்.

அதேபோல் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை வாழ்த்தி, ரோஜாப்பூ கொடுத்தும், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களை சீட் பெல்ட் அணிய செய்து, தொடர்ந்து சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி ரோஜாப்பூ கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow