நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள்-கடன் உதவி கேட்டு கோரிக்கை

கடன் உதவி கிடைத்தால் தொழிலை விரிவுபடுத்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

Jan 4, 2024 - 14:52
Jan 4, 2024 - 22:11
நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள்-கடன் உதவி கேட்டு கோரிக்கை

தலைமுறை தலைமுறையாக நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் வங்கி கடன் உதவி கிடைத்தால் தொழில் மேம்பாடு அடையும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா கொண்ட சமுத்திரம் கிராமத்தில் கடந்த மூன்று தலைமுறையாக விவசாயிகள் உருண்ட வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் மூன்று தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

பொங்கல் மற்றும் தீபாவளி விசேஷ நாட்களில் இந்த வெல்லம் பயன்பாடு அதிக அளவு உள்ளது. இதனை முன்னிட்டு இந்த கிராமங்களில் ஆண்டு முழுவதும் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இவர்கள் சிறிய அளவிலான ஆலை வைத்து குறைவான அளவில் உற்பத்தியை செய்து வருகின்றனர். இவர்களுக்கு வங்கி மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி கிடைத்தால் தொழிலை விரிவுபடுத்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். 

இந்த உருண்டை வெல்லம் கும்பகோணம், பாபநாசம், ஆடுதுறை, மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

எவ்வித கலப்படம் இல்லாமல் சுத்தமாக தயாரிக்கப்படும் நாட்டு வெல்லம் சாதாரண நாட்களில் கிலோ ரூ.60க்கும் விசேஷ நாட்களில் ரூ. 65 க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow