தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் விபரீத முடிவு
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணியில் பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். முடி திருத்தும் தொழிலாளியான இவரது மனைவி கல்பனா.இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.திருத்தணியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மகன் பவுன்குமார் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிவுகளை நேற்று வகுப்பு ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதில் பவுன்குமார் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு கிளம்ப சொல்லி பெற்றோர்கள் சொல்லியபோது நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என தெரிவித்துள்ளான். இதனையடுத்து கதவை தாழிட்டுக்கொண்ட பவுன்குமார் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த, பெற்றோர் கதவை உடைத்து மகனை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மகன் பவுன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?