உ.பி-ஐ தொடர்ந்து டெல்லியிலும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்தது காங்கிரஸ்... எந்தெந்த மாநிலங்களில் எத்தனை சீட்டுகள்?

Feb 22, 2024 - 13:33
உ.பி-ஐ தொடர்ந்து டெல்லியிலும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்தது காங்கிரஸ்... எந்தெந்த மாநிலங்களில் எத்தனை சீட்டுகள்?

I.N.D.I.A கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் வெளியேறிய நிலையில், உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து டெல்லியில் கூட்டணிப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் சுமூகமாக முடித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஒருபுறம் பாஜக தலைமையில் NDA கூட்டணியும் மறுபுறம் I.N.D.I.A கூட்டணியும் தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, I.N.D.I.A கூட்டணி உருவாகக் காரணமான நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து பரபரப்பான சூழலில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் முன்னதாக I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது 17 தொகுதிகளில் காங்கிரசும் மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி, ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்த ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி விட்டுக்கொடுத்தது.

இந்நிலையில் டெல்லியில் 4க்கு 3 என்ற என்ற கணக்கில் ஆம்ஆத்மி - காங்கிரஸ் பேச்சுவார்த்தையை முடித்துள்ளன. அதன்படி தெற்கு டெல்லி, வடமேற்கு, புதுடெல்லி, மேற்கு டெல்லி ஆகிய 4 இடங்களில் ஆம்ஆத்மி போட்டியிடும் எனவும் சாந்தினி சவுக், கிழக்கு டெல்லி, வடக்கு டெல்லி ஆகிய 3 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Fulfill-the-promise-given-to-the-sugarcane-farmers...-Annamalai-insistence-to-the-DMK-government

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow